திருவாரூர் டிச, 24
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.
இந்தஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள் உடனிருந்தனர்.