திருவாரூர் டிச, 19
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அகல்யா மற்றும் ஆதனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.