திருவாரூர் டிச, 17
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு சமூக சீர்த்திருத்தத்துறை அரசு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மேலும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.