திருவாரூர் டிச, 26
முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான சீனிவாசராவ் படத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன் மாலை அணிவித்தார். இதில் சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்த லைவர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் இக்கூட்டத்தில் நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களை நீதிமன்றம் உத்தரவை காட்டி அப்புறப்படுத்தும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.