நீலகிரி டிச, 22
நீலகிரி மாவட்டம் குந்தா மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அரசு மகா கவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சிவா கலந்து கொண்டார்.
இம்முகாமில் மின் உதவியாளர் ராமன் மற்றும் ஆசிரியைகள் சர்மிளா, பாபி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.