நீலகிரி டிச, 18
உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பெய்த கனமழையின் போது பாறைகள் மண் குவியல்கள் ரயில் பாதையில் விழுந்தன. இதனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 16ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.