சேலம் டிச, 21
மேட்டூர் அணைக்காக நீர்வரத்து நேற்று 7600 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 5600 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 99.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.