தர்மபுரி டிச, 21
பென்னாகரம், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பென்னாகரத்தில் நடந்தது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார்.
இவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள், கல்வி உரிமையை உறுதி செய்வதில் ஊராட்சிகளின் அதிகாரம், குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ,பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்வதில் கிராம ஊராட்சிகளின் பங்களிப்பு, பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லாத கிராமம் உருவாக்குவதில் உள்ளாட்சிகளின் பங்கு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தல் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி உரிமை குறித்தும் பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை ஆசிரியர் பயிற்றுனர் முனியப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயிற்சியாளர் ரமா, பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் சசிகுமார், மேகநாதன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வள மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் ஏரியூர், பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்