தர்மபுரி டிச, 22
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தொழிலாளர் நல ஆணையர் அதில் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.