நெல்லை ஆகஸ்ட், 10
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் பகுதியில் உள்ள அதிசய கிணறு மூலமாக நிலத்தடி நீர் அதிகரிப்பு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் அதிசய கிணற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்கிறது. திசையன்விளை அதிசய கிணறு போல் சுற்றுவட்டார பகுதியில் மேலும் 10 க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இந்த கிணறுகள் அமைந்துள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.