விழுப்புரம் டிச, 19
பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன.
மேலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும் சூறைக்காற்றாலும் கீழே சாய்ந்து சேதமாகி உள்ளது.