Spread the love

விழுப்புரம் டிச, 17

சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

இதை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி மேற்பார்வையில் உதவி இயக்குனர் விஜய் சந்தர் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2306 டன், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்திற்கு தலா 200 டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 600 டன், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 400 டன், வேலூர் மாவட்டத்திற்கு 350 டன் என யூரியா மூட்டைகளை பிரித்து லாரிகளில் ஏற்றி அந்தந்த மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியார் விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *