வேலூர் டிச, 18
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட பறக்கும் படை வட்டாச்சியர் கோடீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.