வேலூர் டிச, 26
வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். பொதுவாக 10 முதல் 12 கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் மீன்மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். மீன்களின் விலையும் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் மழையின் காரணமாக நேற்று மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. 4 கன்டெய்னர் லாரிகளில் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன. எனவே மீன்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டிருந்தன. சபரிமலைக்கு செல்பவர்கள் விரதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.