தென்காசி டிச, 17
பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானமானது மிகவும் பள்ளமாக காணப்பட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் மூலம் நெல்லை, தென்காசி நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் பி அண்ட் சி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் மூலம் பள்ளமாக கிடந்த மைதானம் முழுவதும் மண்ணை கொட்டி சீர் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், தட்சண மாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் மற்றும் பி அண்ட் சி நிறுவன மேலாளர் கென்னடி ஆகியோரை சந்தித்து பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் சிவபார்வதி நாதன், ஆசிரியை ஜெகதா, ஆசிரியர் மில்டன், அலுவலக பணியாளர் பீட்டர் ஆரோக்கியசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணோதயம், நாராயண சிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.