தென்காசி டிச, 19
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.