திண்டுக்கல் டிச, 16
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் சக்கரபாணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார்.