தேனி டிச, 13
நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் தீவிரமாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுயிலும் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் போடி சட்டமன்ற தொகுதிற்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள கொடுவிலார்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் கொடுவிலார்பட்டி,பள்ளப்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ,கோட்டைப்பட்டை, சிவலிங்கநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி கிராம மக்கள் அதிக ஆர்வத்துடன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் தங்கள் பெயரினை புதிய உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.