தேனி டிச, 15
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்காபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு, அவர்களது வாழ்வாதார த்தினை மேம்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம்” “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்”, “வரும் முன் காப்போம்” திட்டம், “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்” போன்ற பல்வேறு மருத்து வம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தமிழ கத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வி த்திறனை மேம்படுத்திடும் வகையில் “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” ஆரம்பப்பள்ளி பயிலுகின்ற மாணவ-மாணவியர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் “எண்ணும் எழுத்தும்” திட்டம், பெண் கல்வியை ஊக்குவித்திடும் பொருட்டு புதுமைப் பெண் திட்டத்தி னை அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவி கள் கல்வியினை ஊக்கப்படு த்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கி டவும், கற்றல் இடை நிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, காலை உணவு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 389 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.