தேனி டிச, 11
தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரபாகரன் தலைமையில் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று தேனி நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு பகுதியான கருவேல்நாயக்கன்பட்டியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் பெரிய குளம் சட்டமன்ற தொகுதி, தேனி நகர நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுப்பினர் படிவத்தை பெற்று சென்றனர்.