விருதுநகர் டிச, 13
விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளரிளம் பருவத்தொழிலாளர்களுக்கு தலா ரூ. 25,000 மதிப்பிலும், ஒரு வளர் இளம் பருவத்தொழிலாளிக்கு தலா ரூ.20,000 என மொத்தம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்