காஞ்சிபுரம் டிச, 12
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளை நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தி மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர்.
இன்னும் 2 நாட்களுக்கு வேகவதி ஆற்றில் இந்த வெள்ளப்பெருக்கு நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தற்போது போலீசாருடன் இணைந்து வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது . இந்த வெள்ளப்பெருக்கால் அருகாமை பகுதிகளில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வேகவதி கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கான குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கீழ்கதிர்பூர் பகுதியில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளானது கட்டப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சொற்ப அளவிலானோரே அங்கு குடியேறிய நிலையில் மீதமுள்ளவர்கள் செல்ல மறுத்து தொடர்ந்து இங்கேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.