திண்டுக்கல் டிச, 12
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலையில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்ககள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருப்பு இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை, முகூர்த்த நாள் என்பதால் பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.