செங்கல்பட்டு டிச, 12
மாமல்லபுரத்தில் “மாண்டஸ்” புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார். அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.