செங்கல்பட்டு டிச, 10
ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ஹேன்ட் இன் ஹேன்ட் ஸ்வீடன் இணைந்து மாமல்லபுரத்தில் “தூய்மை சமூகங்களால் தூய்மை கடல்” என்ற திட்டத்தின் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தியது.
இதில் உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பெருநகர் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இவர்களுக்கு திட்டத்தின் இயக்குனர் நார்வே நாட்டை சேர்ந்த “சிக்வே அந்தேரா”, கடற்கரை தூய்மை, பேரிடர் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களை காப்பது, பிளாஸ்டிக் தவிர்ப்பது, கடற்கரை சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தார்.
மாமல்லபுரம்-கோவளம்-கல்பாக்கம் சுற்று வட்டார கடலோரப்பகுதி ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வலர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த பயிலரங்கத்தில் பங்கேற்றனர்.