Spread the love

செங்கல்பட்டு டிச, 14

மாமல்லபுரம் பகுதியில் “மாண்டஸ்” புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர் படகு, வலை, மிஷின் சேதங்களை கணக்கிட்டு அவரிடம் கூறினர்.

மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். பின்னர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் சென்று, அனைத்து மீனவர் பகுதி சேதங்கள் குறித்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன், கவுன்சிலர்கள் சுகுமாரன், சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *