திருவள்ளூர் டிச, 12
தமிழகத்தில் நாகை தஞ்சை நாமக்கல் திருவாரூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.