திருவள்ளூர் டிச, 10
பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர்.
இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பொன்னேரி தாலுக்கா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.