புதுக்கோட்டை டிச, 9
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிழக்கு, வீட்டு வரி ரசீது, 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிட்டு அங்கயே தங்கினர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் துறையினர் புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறை வேற்றித் தருவதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.