புதுக்கோட்டை டிச, 12
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, உதவித் திட்ட அலுவலர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குமரன், பிரேமாவதி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.