ஊட்டி டிச, 9
நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின் படி தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் அர்ஜூணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சாந்திராமு, கருப்புசாமி முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் சண்முகம் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு மற்றும் அ.தி.மு.க பேரூர், நகர, ஒன்றிய, பகுதி, வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.