விழுப்புரம் டிச, 8
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவ சக்திவேல் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா உதவியக்குனர் பொன்னம்பலம் உட்பட பலர் உள்ளனர்.