விழுப்புரம் டிச, 11
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் சித்ரா, விழுப்புரம் சரக காவல் துணை ஆய்வாளர் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட அனு மந்தை, அழகன் குப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார் சாவடி, கோட்ட குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரண மாக விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. 5 இடங்களில் 13 மரங்கள் விழுந்தன, அதனையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு தடை இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழு வதும் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்வதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட, ஆட்சியர்ர் மோகன் தெரிவித்தார்.