காஞ்சிபுரம் டிச, 8
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாணவர்கள் பங்கேற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளனர்.