சேலம் டிச, 7
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் கந்தசாமி (வயது 50) திருவள்ளுவர் சிலையையும், பட்டு, துண்டு, வேஷ்டிகளையும் ஏலத்தில் எடுத்துள்ளார். தமிழகத்திலேயே சேலத்தைச் சேர்ந்தவருக்கு தான் இந்த ஆண்டு ஏலம் மூலம் பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.