Spread the love

சேலம் நவ, 30

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20 ம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில் ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகத் திருவிழாவை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமான புத்தங்களை வாங்கி செல்கின்றனர். இன்றுடன் விழா நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தகத் திருவிழா வருகிற 4 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *