திண்டுக்கல் டிச, 6
திண்டுக்கல் டிசம்பர் 6- ம்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள், ரயில் தண்டவாள பகுதிகள், பார்சல் அலுவலகம் ஆகியவற்றில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கிறதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
பின்னர் பயணிகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்படும் ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனை இன்றும் நடக்கிறது.