திண்டுக்கல் டிச, 2
ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.3-க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பறிப்பு கூலிக்குகூட பணம் கிடைக்காததால் செடியிலேயே பூசணிக்காய்களை விட்டுவிடுகின்றனர்.