நீலகிரி டிச, 2
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்தனா,மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.