புதுடெல்லி நவ, 30
மகளிர் ஐபிஎல் முதல் சீசனை அடுத்தாண்டு மார்ச் மாதம் பிசிசிஐ நடத்த உள்ளது. இதில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஐந்து அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான டெண்டர் வெளியிட உள்ளது. ஒரு அணிக்கு அடிப்படை விலையாக 400 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ஒரு அணி ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஐபிஎல் உரிமையாளர்கள் இந்த ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கலாம்.