தென்காசி நவ, 29
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் சிலை அமைக்க மாற்று இடம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதைத்தொடர்ந்து காமராஜர் சிலை அமைப்புக்குழு, வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காமராஜர் சிலை அமைக்க மாற்று இடம் வழங்கக்கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.