தென்காசி நவ, 27
சிவகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா ஆற்றிய உரையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற டிசம்பர் 8 ம்தேதி தென்காசிக்கு வருகை தர உள்ளார். ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறினார்.