தென்காசி நவ, 25
கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில், துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அதிகாரி பழனிகுமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், மருத்துவர்கள் அன்வர்தீன், முகமது முபாரக், ரம்யா மர முத்துலட்சுமி, பாண்டியராஜன், சித்த மருத்துவர் ரத்னா தேவி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.