புதுக்கோட்டை நவ, 28
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கரம்பக்குடி வட்டாச்சியர் ராமசாமி, கந்தர்வகோட்டை வட்டாச்சியர் ராஜேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மேற்கண்ட பாதையை அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் பல ஆண்டுகளாக ஆண்டாள் தெரு மற்றும் அம்பு கோயில் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து நிலை மாறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய தார் சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் எடுத்தனர். இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்