புதுக்கோட்டை நவ, 30
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 23. 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.