புதுக்கோட்டை நவ, 27
விராலிமலை பேருந்து நிலையத்தில் 12 லட்சத்தி 80 ஆயிரத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் அமைக்க விராலிமலை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், மாவட்ட நிற்வாகத்திற்கு நிர்வாக ஒப்புதல் கோரியிருந்தனர்.
இது தொடர்பக பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் 15 -வது நிதிகுழு மான்யத்தில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரூ.12 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பீட்டில் 5 வணிக கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்று கட்டுமான பணிகள் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் மணிகண்டன், உதவி பொறியாளர் அறிவழகன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சோமேஸ் கந்தர் செய்திருந்தார்.