புதுக்கோட்டை நவ, 24
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடையில்லா இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 165 மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 521 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மெய்ய நாதன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மாணவ, மாணவியரின் நலனை கருதி பல்வேறு நலத்திட்டங்களையும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வசதிகளை செய்துள்ளதால் அதிக மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கல்வி தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பேசினார்.