Spread the love

திண்டுக்கல் நவ, 28

தமிழ்நாட்டில் “பிரதமரின் கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000-ம், 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் 13-வது தவணையாக, அதாவது 2022 டிசம்பர் முதல் மார்ச் முடிய உள்ள காலத்தினை தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *