Spread the love

திண்டுக்கல் நவ, 26

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும்.

மக்களைத்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பரா மரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 61,674 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 28,026 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 28,484 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளி களை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோ தெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *