கொடைக்கானல் நவ, 25
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரபல தொழிலதிபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் ஆசிரியர் இம்பாலா சுல்த்தான் செய்யது இப்ராஹிம் அவரது மகன் நீச்சல் போட்டியில் யோகா நிலையில் ஆசிய அளவில் சாதனை புரிந்த மாணவன் இம்பாலா இன்ஷாஃப் முகம்மது நிகழ்வில் பங்கேற்று மாணவர்களிடையே உரையாடி, சிறந்த பல கருத்துக்களை எடுத்துரைத்து, பரிசுகளை வழங்கினார். உடன் அவரது சகோதரி ரய்யான் நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் ஸ்டெல்லா, தலைமை ஆசிரியர் லூர்து மேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, செல்வ சகாயராணி மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.